என் மலர்

  செய்திகள்

  சிரியாவில் குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரை கொடூரமாக கொன்று எரித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்
  X

  சிரியாவில் குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரை கொடூரமாக கொன்று எரித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடலை எரித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தெரிவித்துள்ளது.
  டமாஸ்கஸ்:

  சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடலை எரித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தெரிவித்துள்ளது.

  சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் தங்களுக்கு ஆதரவளிக்காத பொதுமக்களை சித்திரவதை செய்து கொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள ஜஸ்ரத் பவுஷம்ஸ் எனும் கிராமத்தில் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை சிறைபிடித்துள்ளனர்.

  பின்னர் அவர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, உடல்களை எரித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இரு குழந்தைகள் மற்றும் பெண்கள் அடக்கம். இந்த கொடூர செயலை செய்து விட்டு பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டில் இயங்கி வரும் இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தெரிவித்துள்ளது.

  சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த பெரும்பாலான இடங்கள் அரசுப்படையினரின் கைவசம் வந்து விட்டதால், ஆத்திரமடைந்துள்ள தீவிரவாதிகள் இந்த செயலை செய்திருக்கலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  Next Story
  ×