search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பளப் பணம் 78 ஆயிரம் டாலர்களை பூங்காக்கள் பராமரிப்புக்கு நன்கொடையாக அளித்த டிரம்ப்
    X

    சம்பளப் பணம் 78 ஆயிரம் டாலர்களை பூங்காக்கள் பராமரிப்புக்கு நன்கொடையாக அளித்த டிரம்ப்

    அமெரிக்க அதிபர் பணிக்கான சம்பளப் பணம் 78 ஆயிரம் டாலர்களை தேசிய பூங்காக்களின் பராமரிப்புக்கு டொனால்ட் டிரம்ப் தானமாக அளித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். அமெரிக்காவின் மிகப் பிரபலமான தொழிலதிபரும் பிரபல கோடீஸ்வரருமான டிரம்ப் தேர்தல் பிரசார உரைகளின்போது பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்திருந்தார்.

    தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் அரசின் கருவூலத்தில் இருந்து தனக்கு அளிக்கப்படும் சம்பளப் பணம் முழுவதையும் நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் என அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றுக்கொண்ட டிரம்ப், மக்களுக்கு முன்னர் அளித்திருந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார்.



    அமெரிக்க அதிபரின் ஆண்டு சம்பளம் 4 லட்சம் டாலர்களாக உள்ள நிலையில், தனது முதல் காலாண்டுக்கான (மூன்று மாதங்கள்) சம்பளத் தொகயான 78 ஆயிரத்து 333 டாலர்களை நாட்டிலுள்ள தேசிய பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் புணரமைப்பு பணிகளுக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.



    இந்த அறிவிப்பு தங்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்துள்ளதாக நாட்டிலுள்ள நூற்றாண்டுகால பழமை வாய்ந்த 417 பூங்காக்களை நிர்வகித்துவரும் துறைக்கான உள்துறை மந்திரி ரியான் சின்கே குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×