search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது - பிரதமர் ஷேக் ஹசீனா
    X

    இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது - பிரதமர் ஷேக் ஹசீனா

    இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உடன் நடந்த சந்திப்பின் போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
    டாக்கா:

    இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உடன் நடந்த சந்திப்பின் போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

    மூன்று நாள் வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, வங்கதேச விடுதலை போரின் போது இந்தியா செய்த உதவிக்கு வங்கதேசத்தின் சார்பில் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    மேலும், இந்தியாவின் நட்பை வங்கதேச மக்கள் மதிப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான எந்த செயல்களுக்கும் வங்கதேசம் இடம் தராது என அவர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இம்மாதம் இந்தியா வரும் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னதாக அந்நாட்டு முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர் வங்கதேச விடுதலைப்போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய ராணுவத்தில் தான் அப்போது பணியாற்றிய போக்ரா ராணுவ முகாமுக்குச் சென்று பார்வையிட்டார். 
    Next Story
    ×