என் மலர்

  செய்திகள்

  மடகஸ்கர் தீவில் திருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்து: 10 குழந்தைகள் உட்பட 47 பேர் பலி
  X

  மடகஸ்கர் தீவில் திருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்து: 10 குழந்தைகள் உட்பட 47 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிழக்கு ஆப்பிரிக்காவை ஒட்டியுள்ள மடகாஸ்கர் தீவில் திருமணமான புது தம்பதிகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 47 பேர் உயிரிழந்தனர்.
  அனலமங்கா:

  கிழக்கு ஆப்பிரிக்காவை ஒட்டியுள்ளது மடகாஸ்கர் தீவு. மாடகஸ்கரில்  திருமணமான புது தம்பதிகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. திருமண வீட்டாரை ஏற்றிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த லாரியானது ஆறு ஒன்றில் கவிழ்ந்து விழுந்தது.

  இந்த கொடூர விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 47 பேர் உயிரிழந்தனர். புதிதாக திருமணமான தம்பதிகளும் இந்த விபத்தில் பலியாகினர். மேலும் 22 பேருக்கு காயம் ஏற்பட்டது.

  தலைநகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்ஜோஸோரோப் நகருக்கு வெளியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் லாரியில் திருமண வீட்டார் சென்றதாக தெரிகிறது. விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை 
  கண்டறியப்படவில்லை.

  Next Story
  ×