என் மலர்

  செய்திகள்

  டிரம்புடன் என்ரிக் பெனா நீட்டோ (கோப்புப்படம்)
  X
  டிரம்புடன் என்ரிக் பெனா நீட்டோ (கோப்புப்படம்)

  எல்லைச்சுவர் தொடர்பாக பொதுவெளியில் இனி பேசுவதில்லை: அமெரிக்கா - மெக்சிகோ அதிபர்கள் முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளுக்கு இடையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லைச்சுவர் கட்டுவது குறித்து மெக்ஸிகோ அதிபரும் அமெரிக்க அதிபரும் இனி பொதுவெளியில் பேசுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
  வாஷிங்டன்:

  மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

  அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ள நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

  அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என குறிப்பிட்டார்.

  இந்த நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும்  பொது வெளியில் இனி கருத்து தெரிவிக்கமாட்டார்கள் என்று மெக்சிகோ அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையின் மூலம் வேறுபாடுகளை களையவும் இருநாட்டு தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

  மேலும், அந்த அறிக்கையில் டிரம்பும், பெனோ நீட்டோவும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியில் உரையாடியதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகவும் மெக்சிகோ அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  Next Story
  ×