என் மலர்

  செய்திகள்

  பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படுமா? பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு
  X

  பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படுமா? பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு செய்ய உள்ளது.
  லண்டன்:

  கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பொதுமக்களிடம் கடந்த ஜூன் மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 55% பொதுமக்கள் விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

  மேலும், இதில் உடன்பாடு இல்லாததால் அப்போதிய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். அவரையடுத்து புதிய பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்றார்.

  இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய விவகாரத்தில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என பிரிட்டன் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

  இந்நிலையில், பிரிக்ஸிட் வாக்கெடுப்பு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது. இதில் வாக்க்கெடுப்பை மறுஆய்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

  Next Story
  ×