என் மலர்

  செய்திகள்

  வங்காளதேசம்: கொல்கத்தா வந்த ரெயில் மோதி காரில் சென்ற 5 பேர் பலி
  X

  வங்காளதேசம்: கொல்கத்தா வந்த ரெயில் மோதி காரில் சென்ற 5 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காளதேசத்தில் இருந்து கொல்கத்தா நகரை நோக்கிவந்த ரெயில் மோதி காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்,
  டாக்கா:

  இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவை வங்காளதேச தலைநகரான டாக்காவுடன் இணைக்கும் வகையில் ‘மைத்ரி எக்ஸ்பிரஸ்’ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

  டாக்கா நகரில் இருந்து கொல்கத்தாவை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த ரெயில் வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள காசிபூர் மாவட்டத்தின் இன்று காலை நெருங்கியபோது, இங்குள்ள காலியாகாய்ர் பகுதியில் இருக்கும் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ஒரு கார் முயன்றது.

  தண்டவாளத்தை கடந்து செல்வதற்குள் வேகமாக வந்த ரெயில், அந்தக் காரின்மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் தூக்கியெறியப்பட்டு, அதில் பயணம் செய்த இரு குழந்தைகள், இரு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

  இன்று காலை 10.15 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தை நேரில் பார்த்த சிலர், விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வேகமாக சென்ற மைத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டி கவிழ்ந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×