என் மலர்

  செய்திகள்

  பாகுபாடு காட்டுவோரை வளர்ப்பு நாய் மூலம் படம் பிடிக்கும் பார்வையற்ற இந்தியர்
  X

  பாகுபாடு காட்டுவோரை வளர்ப்பு நாய் மூலம் படம் பிடிக்கும் பார்வையற்ற இந்தியர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் வசிக்கும் பார்வையற்ற இந்தியர் ஒருவர், தன்னிடம் பாகுபாடு காட்டுபவர்களையும், இகழ்ந்து பேசுவோரையும் வளர்ப்பு நாய் மூலம் வீடியோ எடுத்து அறிந்துகொள்கிறார்.
  லண்டன்:

  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் படேல், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது பார்வையை இழந்து விட்டார். இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். வெளியில் செல்லும் போது தனது உதவிக்காக நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.

  பார்வையில்லாதவர் என்பதால் அவரிடம் பலபேர் பாகுபாடு காட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அமித் படேல் தனது வளர்ப்பு நாய் மீது கேமராவை வைத்து கட்டிவிட்டார்.

  தற்போது அதில், அவரிடம் பாகுபாடு காட்டியவர்கள், அவரை ஏமாற்றிய டாக்சி டிரைவர்கள் மற்றும் அவர் சந்தித்த சிக்கல்கள் வீடியோவாக பதிந்துள்ளது. அதை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
  Next Story
  ×