search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்
    X

    ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்

    ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
    புசாரெஸ்ட்:

    ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடு ருமேனியா. செர்பியா, பல்கேரியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவியா ஆகியவை அதன் அண்டை நாடுகள்.

    ருமேனியா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இடதுசாரிகளின் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    இதனையடுத்து, பிரதமர் பதவிக்கு முதல் பெண்ணாகவும், முதல் இஸ்லாமிய நபராகவும் செவில் ஷஹைத்தை பரிந்துரை செய்ய அக்கட்சி முடிவு செய்தது. இந்த பரிந்துரை அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.

    இந்நிலையில், ருமேனியா நாட்டில் முதல் பெண் பிரதமராக செவில் ஷகைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அந்நாட்டு அதிபர் கிளவுஷ் ஐஹன்னிஸ் நிராகரித்தார்.

    ஷைஹைத்தை நிராகரித்ததற்கு அவர் உரிய காரணத்தை தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது சிரிய நாட்டை சேர்ந்தவர் என்பது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    52 வயதாகும் ஷஹைக்கு 5 மாத காலம் தான் அமைச்சர் அனுபவம் உள்ளது என்றும் அவரது இஸ்லாமிய மத நம்பிக்கையால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    ஷஹைத்தின் நிராகரிப்பு ருமேனியா அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×