என் மலர்

  செய்திகள்

  உகாண்டாவில் கிறிஸ்துமஸ் தினவிழாவில் 30 பேர் ஏரியில் மூழ்கி பலி
  X

  உகாண்டாவில் கிறிஸ்துமஸ் தினவிழாவில் 30 பேர் ஏரியில் மூழ்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உகாண்டா நாட்டில் கிறிஸ்துமஸ் தின விழாவில் கால்பந்து வீரர்கள் உள்பட 30 பேர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கம்பாலா:

  உகாண்டா - காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டிற்கிடையிலான எல்லையில் ஓடும் ஏரி அல்பெர்ட். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறந்த ஏரிகளில் இதுவும் ஒன்று. மேலும் ஆப்பிரிக்காவின் 7-வது மற்றும் உலகின் 27-வது மிகப்பெரிய ஏரியாக விளங்குகிறது.

  160 கிலோ மீட்டர் நீளமும், 30 கி.மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரியில் உகாண்டாவின் புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் கால்பந்து அணியினர் மற்றும் அவர்களின் ரசிகர்கள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஹொய்மா மாவட்டம் ரங்காவில் நடைபெற இருந்த போட்டியில் பங்கேற்பதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் டிரம்ஸ் போன்ற இசைக்கருவியால் இசைத்து ஆடி பாடி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர்.

  இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் ‘‘இந்த ஏரி அதிக அளவில் ஆர்ப்பரிக்கும் தன்னையை கொண்டதில்லை. வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோசத்தின் காரணமான ஒரு சைடில் அதிக அளவில் குவிந்ததால் படகு கவிழ நேரிட்டது. உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து எங்களால் 15 பேரை காப்பற்ற முடிந்தது’’ என்றார்.
  Next Story
  ×