search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2016-ன் செல்வாக்கான நபர் பட்டியல்: அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த மோடி
    X

    2016-ன் செல்வாக்கான நபர் பட்டியல்: அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த மோடி

    2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபர்கள் பட்டியலில் அமெரிக்க, ரஷிய அதிபர்களை பின்னுக்குத்தள்ளி இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் அதிபர் தெரசா மே, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், எப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கமே, ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் 18% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே ஆகியோர் 7% வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.

    பேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் 4% வாக்குகளையும், ஹிலாரி கிளிண்டன் 2% வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் இறுதி முடிவை டைம் இதழ் டிசம்பர் 7-ம் தேதி அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×