என் மலர்

  செய்திகள்

  ஆன்லைனில் கிண்டல்: பெற்றோர் முன்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
  X

  ஆன்லைனில் கிண்டல்: பெற்றோர் முன்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘அழகாக இல்லை’ என ஆன்லைனில் கிண்டல் செய்ததால் பெற்றோர் முன்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  டெக்சாஸ்:

  அமெரிக்காவில் உள்ள டெக்காஸ் பகுதியை சேர்ந்தவர் பிராண்டிவெலா. பள்ளி மாணவி. இவர் அழகாக இல்லை என்றும், குண்டாகவும், அசிங்கமாகவும் இருப்பதாகவும் ஆன்லைனில் சிலர் கிண்டல் செய்தனர்.

  இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் தனது தங்கை ஜாக்குலினுக்கு இதுகுறித்து ஒரு தகவல் அனுப்பினார். மேலும் தான் தற்கொலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

  அதைப்பார்த்த ஜாக்குலின் உடனடியாக டெக்காஸ் வந்தார். நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் அனைவரும் பிராண்டி வெலாவின் படுக்கை அறைக்கு சென்றனர். அங்கு அவர் தற்கொலை செய்ய துப்பாக்கியுடன் தயாராக இருந்தார்.

  இதனால் பதட்டம் அடைந்த அவர்கள், “நீ அழகாக இருக்கிறாய். எனவே தற்கொலை செய்ய வேண்டாம்” என எவ்வளவோ கெஞ்சி மன்றாடினார்கள். இருந்தும் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  Next Story
  ×