என் மலர்

  செய்திகள்

  சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களும் பலி
  X

  சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களும் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவின் கிட்டைஹே நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களும் பலியானதாக அரசு அறிவித்துள்ளது.
  பீஜிங்:

  சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட கிட்டைஹே நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

  இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் பலரை காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

  உள்ளே சிக்கியிருந்த மேலும் சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உள்ளே சிக்கியிருந்த 21 தொழிலாளர்களும் பிணமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

  அரசிடம் உரிமம் பெறாமல் இந்த நிலக்கரி சுரங்கத்தை நடத்திவந்த உரிமையாளர் மற்றும் நிர்வாகி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
  Next Story
  ×