search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் விசா மோசடி
    X

    அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் விசா மோசடி

    அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட இந்திய தொழில் அதிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான தண்டனை தீர்ப்பு, மார்ச் மாதம் 13-ந் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தின் எடிசன் நகரில் வசித்து வருபவர், தொழில் அதிபர் தேஜஷ் கோடாலி (வயது 45). இந்தியர். இவர் அங்கு ‘புரோமேட்ரிக்ஸ் கார்ப் அண்ட் புளூ கிளவுட் டெக்ஸ் கார்ப்’ என்ற நிறுவனத்தை இயக்குனராக இருந்து நடத்தி வந்தார்.

    இவர் வெளிநாட்டினரை அமெரிக்காவுக்கு மாணவர்களுக்கான விசாவில் வர வைத்து, அவர்களுக்கு முழு நேர வேலை வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளார். மாணவர் விசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக, அவர்களை நியூஜெர்சி கல்லூரியில் சேர்த்தும் வந்துள்ளார். ஆனால் அவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்வதில்லை.

    இப்படி 37 பேருக்கு அவர் மாணவர்கள் விசா பெற்றுத்தந்து, பணியில் அமர்த்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருடன் வேறு சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து நேவார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது நீதிபதி மெடலின் காக்ஸ் ஆர்லியோ முன்னிலையில் தேஜஷ் கோடாலி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 2½ லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 67 லட்சம்) அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    அவர் மீதான தண்டனை தீர்ப்பு, மார்ச் மாதம் 13-ந் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×