search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார்: ஒபாமா
    X

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார்: ஒபாமா

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார் என ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார்
    வாஷிங்டன்:

    நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. “நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிச்செல்லுக்கு மந்திரி பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது. ஒரு பெண், முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆகிற வாய்ப்பும் தட்டிப்போய் விட்டது.

    இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒபாமா போட்டியிடக்கூடும் என யூகங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக ‘ரோலிங் ஸ்டோன்’ என்ற பத்திரிகைக்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டார். அப்போது அவர், “மிச்செல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார். நீங்கள் அறிந்தபடி மிச்செல் திறமை வாய்ந்தவர். அமெரிக்க மக்களுடன் அவர் வியக்கத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளார். ஆனால் அவர் அரசியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று நான் தமாஷ்தான் பண்ண வேண்டும்” என்று கூறினார்.

    ஏற்கனவே முன்பு மிச்செல்லிடம் அவரது எதிர்கால திட்டம் பற்றி கேட்டபோது அவர், “நான் ஒருபோதும் ஹிலாரியின் பாதையில் செல்ல மாட்டேன்” என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது. ஹிலாரி, தனது கணவர் கிளிண்டனின் பாதையில் அரசியலில் குதித்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×