search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நான் இனி தொழிலதிபர் அல்ல - நாட்டின் அதிபர் மட்டும் தான்: டிரம்ப் அதிரடி
    X

    நான் இனி தொழிலதிபர் அல்ல - நாட்டின் அதிபர் மட்டும் தான்: டிரம்ப் அதிரடி

    தொழில் நடவடிக்கைகளை கைவிட்டு, அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த போவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர்.

    தொழிலதிபரான டிரம்ப் நிச்சயம் தோல்வியை தழுவுவார் என்றே பெருவாரியான கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வந்தன. ஆனால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், தொழிலதிபரான டிரம்ப் இனி தனது தொழில் நடவடிக்கைகளை கைவிட்டு, அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப், “நான் எனது சிறந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விடுபட போகிறேன். இனி எனது நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×