என் மலர்
செய்திகள்

சிரியா: மகப்பேறு மருத்துவமனையின் மீது குண்டுவீச்சு
சிரியாவில் மகப்பேறு மருத்துவமனையின் மீது போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் போராளிகள்வசம் சிக்கியுள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை மீட்பதற்காக ரஷிய விமானப்படையின் உதவியுடன் அரசுப் படைகள் சமீபகாலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலின் எதிரொலியாக போராளிகள் பின்வாங்க தொடங்கியுள்ளதால் அரசுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களுக்கு இடையிலான எல்லையோர கிராமமான டெர்மானின் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் மீது நேற்று போர் விமானங்கள் நடத்திய ஆவேச தாக்குதலில் அந்த மருத்துவமனை கட்டிடத்தின் முன்பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இந்த தாக்குதலில் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் வசித்துவந்த மூன்றுபேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என சிரியா மற்றும் ரஷியா நாட்டின் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story