search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகாராகுவா, எல் சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி பேரலைகள் தாக்கின
    X

    நிகாராகுவா, எல் சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி பேரலைகள் தாக்கின

    மத்திய அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நிகாராகுவா, எல் சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒருமீட்டர் உயரத்துக்கு எழும்பிய சுனாமி பேரலைகள் கரைப்பகுதியை ஆக்ரோஷமாக தாக்கின.
    சான் சால்வடார்:

    மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள கரிபியன் நாடுகளான நிகாராகுவா, எல் சால்வடாரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், எல் சால்வடாரில் உள்ள பியுரெட்டோ ட்ரியுன்போ நகரில் இருந்து தெற்கு-தென்மேற்கு பகுதியில் சுமார் 154 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று பின்னிரவு நிகாராகுவா மற்றும் இதே பகுதியை இரண்டாம் எண் எச்சரிக்கை விடப்பட்ட கடற்புயல் தாக்கியது. இந்த நிலையில் இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக ஒருமீட்டர் உயரத்துக்கு எழும்பிய சுனாமி பேரலைகள் கரைப்பகுதியை ஆக்ரோஷமாக தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் சுற்றளவில் சுனாமி பேரலைகள் தாக்கலாம் என இங்குள்ள வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
    Next Story
    ×