என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரு பொருளாதார மாநாட்டில் ஒபாமா, புதின் திடீர் சந்திப்பு
Byமாலை மலர்21 Nov 2016 9:42 AM GMT (Updated: 21 Nov 2016 9:42 AM GMT)
பெரு நாட்டில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
லிமா:
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் 28-வது ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு (APEC) உறுப்பு நாடுகளிடையேயான இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் 20 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டின் இடையே அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் சந்தித்து சிறிதுநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் ஒபாமா-புதின் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது. இதனால் ஒபாமா, புதின் இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story
×