search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜென்டினா-சிலியில் கடும் நிலநடுக்கம்
    X

    அர்ஜென்டினா-சிலியில் கடும் நிலநடுக்கம்

    அர்ஜென்டினா மற்றும் சிலியில் 6.4 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின.

    அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து அலறியடித்தபடி மக்கள் வெளியேறினர். ரோடுகள் மற்றும் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான சிலியிலும் எதிரொலித்தது. அங்கும் வீடுகள் குலுங்கின. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் தொடக்கத்தில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் அது 6.4 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது.

    அர்ஜென்டினாவின் சான்ஜியான் நகரில் இருந்து தென் மேற்கில் பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை. காயம் மற்றும் உயிரிழப்பு இல்லை என சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகள் தெரிவித்துள்ளன. சிலியின் மத்திய பகுதியில் செம்பு சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன.

    நிலநடுக்கத்தால் அங்கு பணி பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

    Next Story
    ×