என் மலர்

  செய்திகள்

  விற்பனை சரிவால் வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்த ‘ஆப்பிள்’
  X

  விற்பனை சரிவால் வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்த ‘ஆப்பிள்’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
  நியூயார்க்:

  ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம் 15 ஆண்டுகளில் முதன்முறையாக விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

  நடப்பு ஆண்டில் (2016) செப்டம்பர் 24-ம் தேதிவரை ஐபோன்கள், கைக்கடிகாரங்கள், மேக் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அனைத்து விதமான பொருட்களை விற்றதன் மூலம் 215.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வருவாய் ஈட்டியுள்ளது.

  இது கடந்தாண்டு அந்நிறுவனம் நடத்திய 233.7 பில்லியன் வர்த்தகத்துடன் ஒப்பிடும் போது 8.1 சதவிகிதம் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த சரிவின் எதிரொலியாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் 45.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு (14 சதவிகிதம்) குறைந்துள்ளது.
  Next Story
  ×