search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் மூடுபனியால் கார்கள் மோதல்: 25 பேர் பலி - 100 பேர் காயம்
    X

    பாகிஸ்தானில் மூடுபனியால் கார்கள் மோதல்: 25 பேர் பலி - 100 பேர் காயம்

    பாகிஸ்தானில் ஏற்பட்ட மூடுபனியால் கார்கள் மோதிக்கொண்டதில் 25 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்தனர்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் லாகூர் நெடுஞ்சாலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை பஞ்சாப் மாகாணம் ஹாஷாபாத் என்ற இடத்தில் மூடுபனி கடுமையாக இருந்தது. இதனால் ரோட்டில் சென்ற வாகனங்களுக்கு வழிதெரியவில்லை. முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

    இருந்தும் வழி தெரியாமல் ரோட்டில் சென்ற 12 கார்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பஸ்சும் விபத்துக்குள்ளானது.

    இதில் 13 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாத்ரீகர்கள் ஆவர். லாகூர் அருகேயுள்ள ரெய்வின்ட் என்ற இடத்தில் தாப்லீகி ஜமாத் என்ற இடத்தில் உள்ள வழிபாட்ட தலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள்.

    இவை தவிர ராவல் பண்டி- இஸ்லாமாபாத் இடையே சுகேசி என்ற இடத்தில் கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர். இதுவும் கடும் பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று பைசலா பாத்தில் 2 கார்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர் நேற்று நடந்த இந்த 3 விபத்துக்களில் 25 பேர் பலியாகினர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×