என் மலர்

  செய்திகள்

  பசுபதிநாத் கோவிலில் பிரணாப் முகர்ஜி சிறப்பு வழிபாடு
  X

  பசுபதிநாத் கோவிலில் பிரணாப் முகர்ஜி சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகபிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவிலுக்கு சென்று பிரணாப் முகர்ஜி சிறப்பு வழிபாடு செய்தார்
  காத்மாண்டு:

  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் அரசுமுறை பயணமாக நேபாளத்துக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது நேற்று அவர் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகபிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு சென்ற அவருக்கு பசுபதிநாத் கோவிலின் டிரஸ்டி கோவிந்த தாண்டன் மற்றும் டிரஸ்டு உறுப்பினர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

  இந்த கோவிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ருத்ராபிஷேகம் என்ற சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த பூஜையில் கோவில் முழுவதும் 1 லட்சம் தீப விளக்குகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

  கடந்த ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பத்தால் இந்த கோவில் வளாகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றியும் கோவிலின் நிர்வாகிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். அவருடன் சென்றுள்ள இந்திய குழுவில் இல.கணேசன் எம்.பி.யும் இடம் பெற்று உள்ளார்.

  Next Story
  ×