என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தான் அகதி பெண்ணுக்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுப்பு
  X

  ஆப்கானிஸ்தான் அகதி பெண்ணுக்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு ஜாமீன் வழங்க பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. குற்றம் நிருபிக்கப்பட்டால் குலாவுக்கு 14 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
  பெஷாவர்:

  கடந்த 1984-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்த ஆப்கான் அகதியான ஷார்பாத் குலாவின் புகைப்படம், நேஷனல் ஜியோகிராபிக் மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற பின்னர், அப்பத்திரிக்கையின் மிகப் புகழ்பெற்ற அட்டைப் படமாக மாறியது. சிலர் இப்புகைப்படத்தை உலக பிரசித்தி பெற்ற மோனாலிசாவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

  தற்போது நாற்பது வயதை தாண்டியுள்ள ஷார்பாத் குலா, ஒரு போலி பாகிஸ்தான் அடையாள அட்டையை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெஷாவரில் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

  ஷர்பத் குலாவை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்து ஒருவாரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு  ஜாமீன் வழங்க பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. குற்றம் நிருபிக்கப்பட்டால் குலாவுக்கு 14 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.  இருப்பினும் மனிதபாபிமான அடிப்படையில் குலா விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் சூசகமாக அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×