search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விமான நிலையத்திற்கு வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி: பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
    X

    விமான நிலையத்திற்கு வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி: பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

    சுவிட்சர்லாந்தில் விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
    பெர்லின்:

    சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு இன்று பிற்பகல் 1 மணியளவில் ஏரோபிளாட் ஜெட் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கவுண்டருக்கு வந்த ஒரு நபர், மாஸ்கோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

    இதனால், புறப்படத் தயாராக இருந்த அந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி, பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தினுள் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டோ அல்லது சந்தேகப்படும்படியான பொருளோ இல்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×