என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
  X

  பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர்.
  லாகூர்:

  பாகிஸ்தான், தனது நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இல்லை என்று கூறி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் உள்ள ராணுவ கட்டிடங்கள் மற்றும் நாட்டின் பிற பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த சதி செய்து கொண்டிருப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு உளவு தகவல்கள் கிடைத்தன.

  அதன்பேரில் நேற்று முன்தினம் அவர்கள் பதுங்கி இருந்த வீட்டை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர்.

  அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரையும் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  ஏற்கனவே கடந்த மாதம் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் 12-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×