என் மலர்

  செய்திகள்

  சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர திரையில் ஓடிய ஆபாச படம்: வாலிபர் கைது
  X

  சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர திரையில் ஓடிய ஆபாச படம்: வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர திரையில் ஆபாச படம் ஓடியது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
  ஜகர்தா:

  இந்தோனேசியா நாட்டில் தெருக்களில் ஆங்காங்கே விளம்பர திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் விளம்பர படங்கள் எந்த நேரமும் ஒளிபரப்பப்பட்டு வரும்.

  இப்படி வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பர திரையில் திடீரென ஆணும், பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஆபாச படங்கள் தொடர்ந்து ஓடின. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த ஒளிபரப்பை நிறுத்தினார்கள். இந்த படத்தை ஒளிபரப்பிய அல்ககாம்ரேலியல் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

  அவரிடம் விசாரித்தபோது கம்ப்யூட்டரில் விளம்பர படங்கள் ஏற்றி வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அதே கம்ப்யூட்டரில் இருந்த ஆபாச படம் தவறுதலாக தானாக இயங்கி விட்டது என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×