search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பள உயர்வு கேட்டு இலங்கையில் இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
    X

    சம்பள உயர்வு கேட்டு இலங்கையில் இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

    சம்பள உயர்வு கேட்டு இலங்கையில் இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    கொழும்பு:

    இலங்கையில் மத்திய மற்றும் உவா மாகாணங்களில் 9 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் 2 லட்சம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆவர்.

    இவர்களில் பெரும்பாலானோர் 100 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை தோட்ட பகுதியில் உள்ள சிறிய அறைகளில் வசிக்கின்றனர். இவர்களை தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயேர்கள் இலங்கைக்கு அழைத்து வந்து தேயிலை தோட்டங்களில் பணி அமர்த்தினர்.

    இவர்கள் தங்களுக்கு கூலி உயர்வு கோரி போராட்டம் நடத்தி வருகிறனர். 2013-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 கூலி வழங்கப்பட்டது.

    அது கடந்த (2015) ஆண்டுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்போராட்டம் நடக்கிறது.

    இவர்களது போராட்டத்துக்கு தமிழ் மந்திரி மனோ கணேசன் ஆதரவு தெரித்துள்ளார். அவர்களின் போராட்டம் நியாயமானது. அவர்கள் விடுத்துள்ள சம்பள உயர்வு கோரிக்கையை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×