என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2016-ம் ஆண்டின் மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு: ஜப்பான் நாட்டின் யோஷினோரி ஒஷுமி பெறுகிறார்
Byமாலை மலர்3 Oct 2016 10:24 AM GMT (Updated: 3 Oct 2016 10:24 AM GMT)
இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு ஜப்பான் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோம்:
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது. முதலில் மருத்துவ நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னைத்தானே சரிசெய்து மறுசுழற்சி செய்யும் உயிரியல் செல்களின் செயல்முறைகள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும் நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. மிக உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 7-ம்தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. மலேரியா மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

Next Story
×