என் மலர்

  செய்திகள்

  சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி
  X

  சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவில் 953 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்திய இசை நிகழ்ச்சி இதற்கு முந்தையை கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது
  பெய்ஷிங்:

  சீனாவில் உலக அளவில் புதிய கின்னஸ் சாதனை படைக்க மாபெரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைநகர் பெய்ஷிங்கில் உள்ள மியுசிக் அகாடமியில் நடத்தப்பட்டது.

  அதில் 953 இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பாடகர்கள் 349 பேரும், கிடார் வாசிப்பவர்கள் 154 பேரும், டிரம் இசைக்கலைஞர்கள் 151 பேரும், கீ போர்டு வாசிப்பவர்கள் 100 பேரும் மற்றும் பலரும் அடங்குவர்.

  அதிக இசைக்கலைஞர்கள் சேர்ந்து நடத்தியதால் இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி 520 பேர் நடத்திய இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக கருதப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

  தற்போது 953 கலைஞர்கள் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி அந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  Next Story
  ×