search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் டிரம்ப் ஓட்டல் மீது பெயிண்ட் வீச்சு
    X

    அமெரிக்காவில் டிரம்ப் ஓட்டல் மீது பெயிண்ட் வீச்சு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் ஓட்டலில் வாசகம் எழுதப்பட்ட நிலையில் பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் கோடீசுவரர் ஆவார். இவருக்கு சொந்தமான ‘இன்டர் நே‌ஷனல்’ ஓட்டல் வாஷிங்டனில் உள்ளது.

    அந்த ஓட்டலின் முன்புற சுவரில் யாரோ மர்ம மனிதர்கள் பெயிண்ட் வீசி தெளித்துள்ளனர். மேலும், ‘கறுப்பர் இன மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் அமைதியின்றியும், நீதி கிடைக்காமலும் வாழ்கிறார்கள் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் பெயிண்ட் வீச்சு நடந்த இடத்திலும், வாசகங்கள் எழுதப்பட்ட இடத்திலும் பிளைவுட்ஸ் பலகைகளால் மறைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் அகுய்டா பிரவுன் கூறும் போது, யாரோ வி‌ஷமிகள் இக்காரியத்தை செய்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்றார்.
    Next Story
    ×