என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எத்தியோப்பியா: திருவிழாவில் கலவரம் - போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடிய 52 பேர் நெரிசலில் மிதிபட்டு பலி
Byமாலை மலர்3 Oct 2016 3:23 AM GMT (Updated: 3 Oct 2016 3:23 AM GMT)
எத்தியோப்பியா நாட்டில் கடவுளுக்கு நன்றியுடன் காணிக்கை செலுத்தும் சமர்ப்பிக்கும் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடிய 52 பேர் நெரிசலில் மிதிபட்டு உயிரிழந்தனர்.
அடிடாஸ் அபாபா:

கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்ள ஒரோமியா மாகாணத்தில் ஆண்டுதோறும் கடவுளுக்கு நன்றியுடன் காணிக்கை செலுத்தும் சமர்ப்பிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இங்குள்ள பிஷோஃப்டு நகரில் நேற்று மாலை நடைபெற்ற இந்த திருவிழாவில் சுமார் 20 லட்சம் மக்கள் திரண்டனர். திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின்மீது முக்கிய தலைவர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் அந்த தலைவரை எதிர்த்தும்,அரசை கண்டித்தும் கூச்சலிட்டனர்.
கூச்சலிட்டவர்களை எதிர்த்து அரசிம் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். இதனால் அங்கு இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக வெடித்தது.
இருதரப்பு ஆதரவாளர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலவரத்தை கட்டுப்பட்டுத்த தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை பிரயோகித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
இந்த முயற்சி பலனளிக்காததால் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கலவரக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நிலைமை மோசமடைந்ததால் உயிர் பயத்துடன் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
அனைவரும் ஒரேதிசையை நோக்கி ஓடியததால் சிலர் கால்இடறி கீழே விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் அவசரமாக ஓடிவந்த பலர் விழுந்து கிடந்தவர்களை மிதித்தபடி ஓடமுயன்று, நிலைகுலைந்து கீழே சரிந்தனர். அவர்களுக்கும் பின்னால் இருந்து வேகமாக ஓடிவந்த பலர் கீழே விழுந்து கிடந்தவர்களை மிதித்தபடி தப்பியோடினர்.
இந்த மிதிபாட்டில் சிக்கி 52 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தள்ளுமுள்ளில் மிதிபட்ட பலர் ஆஸ்பத்திரிகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Next Story
×