என் மலர்

  செய்திகள்

  இலங்கைக்கு ரூ. 1 கோடி ஹெராயின் கடத்திச் சென்ற இந்தியர் கைது
  X

  இலங்கைக்கு ரூ. 1 கோடி ஹெராயின் கடத்திச் சென்ற இந்தியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இருந்து 1.4 கிலோ ஹெராயினை கொண்டுவந்த இந்தியரை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
  கொழும்பு:

  சென்னையில் இருந்து 1.4 கிலோ ஹெராயினை கொண்டுவந்த இந்தியரை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

  சென்னையில் இருந்து இன்று அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது ஒருவரின் கைப்பையில் மறைத்து கொண்டுவந்த ஒரு கிலோ 400 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை விலைமதிப்பு சுமார் ஒருகோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×