search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை
    X

    கொலை வழக்கில் ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை

    இலங்கை முன்னாள் மந்திரியும், ராஜ பட்சேவுக்கு ஆலோசகராக இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவருக்கு கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு ஐகோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.
    கொழும்பு:

    2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன் விரோத காரணமாக பாரத லக்ஷ்மன்பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    கொலை தொடர்பாக 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் முன்னாள் மந்திரியாகவும், ராஜ பட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவரும் ஒருவர் ஆவார்.

    2012-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் 2015 தேர்தலில் ராஜபட்சே தோல்வி அடைந்த பிறகு இந்த விவகாரம் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது.

    இந்நிலையில், ராஜ பட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×