என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார்
  X

  அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலைக்காரப் பெண்ணை, நாய்களுடன் தூங்க வைத்து பட்டினி போட்டது தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார் செய்யப்பட்டுள்ளது
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

  இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

  இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.

  அதே நேரத்தில் வேலைக்காரப் பெண்ணுக்கு உடல் நலமில்லாதபோது, அவரை தன் வீட்டு செல்ல நாய்களுடன் ஹிமான்சு பாட்டியா தூங்க வைத்துள்ளார். அத்துடன் தான் வெளியே செல்கிற நாட்களில் வேலைக்காரப் பெண்ணுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துள்ளார். சுதந்திரமாக வெளியே செல்லவும் அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை.

  ஒரு கட்டத்தில் அந்த வேலைக்காரப் பெண், தொழிலாளர் சட்டங்கள் பற்றி இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது, அதைக் கண்டுபிடித்து, அவரை ஹிமான்சு பாட்டியா வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

  இது தொடர்பான புகாரின் பேரில் ஹிமான்சு பாட்டியா மீது அமெரிக்க தொழிலாளர் நலத்துறை கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதில் அவர் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  Next Story
  ×