என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோலாலம்பூரில் இலங்கைத் தூதர் மீது தாக்குதல்: ராஜபக்சே பேட்டி
Byமாலை மலர்6 Sep 2016 6:20 AM GMT (Updated: 6 Sep 2016 6:20 AM GMT)
மலேசியாவில் ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தூதர் மீது நடத்திய தாக்குதலை இலங்கை அரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருத வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மலேசியா நாட்டுக்கு சென்றார். அவரது வருகையை கண்டித்துக் கோலாலம்பூர் விமான நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்பினர், இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சரிடம், ராஜபக்சே எங்கு செல்கிறார்? என்ற விபரத்தைக் கேட்டனர்.
விவரங்களைக் கூற அவர் மறுத்ததையடுத்து இப்ராகிம் அன்சரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த இப்ராகிம் அன்சர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, கோலாலம்பூரில் இலங்கைத் தூதர் மீது நடத்திய தாக்குதலை இலங்கை அரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்துவந்த தீவிரவாத பிரச்சாரத்தை முறியடித்தது போல், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன். ஆனால், கோலாலம்பூரில் இலங்கைத் தூதர் மீது நடத்திய தாக்குதலை இலங்கை அரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருத வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
×