என் மலர்

  செய்திகள்

  குவெட்டா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
  X

  குவெட்டா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.
  பாகிஸ்தான்:

  பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி நேற்று மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

  படுகாயம் அடைந்த அவரை உடனடியாக சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 93 பேர் பலியாகி உள்ளனர்.

  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  கருப்பு பேட்ஜ் அணிந்தும், தீவிரவாதத்துக்கு எதிரான வாசகங்களை ஏந்தியும் முக்கிய நகரங்களில் வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   
  குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இன்று பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
  Next Story
  ×