search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தண்ணீரில் பறக்கும் டாக்ஸி: பிரான்சில் அறிமுகம்
    X

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தண்ணீரில் பறக்கும் டாக்ஸி: பிரான்சில் அறிமுகம்

    பிரான்ஸ் நாட்டின் சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றாக நீரில் செல்லக்கூடிய டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    பாரிஸ்:

    உலகம் முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளில் முக்கியமானதாக போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இதனால், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக நீரில் செல்லக்கூடிய டாக்ஸி ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’சீ பப்புள்ஸ்’ என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    முட்டை வடிவத்தில் உள்ள இந்த டாக்ஸியில் ஒரே நேரத்தில் 5 பேர் வரை பயணம் செய்யலாம். மணிக்கு சுமார் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த டாக்ஸி தண்ணீர் உட்புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள ரைன் நதியில் தற்போது இந்த டாக்ஸி சேவையைத் துவங்கப்பட்டுள்ளது.

    எதிர்காலத்தில் ஸ்மார்ட் போனில் இயங்கக்கூடிய ரோபோ மூலம் இந்த டாக்ஸியை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீ பப்புள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×