search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்ப் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருப்பார்: சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு
    X

    டொனால்ட் டிரம்ப் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருப்பார்: சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு

    குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்றால் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருக்க கூடும் என சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். பிராச்சாரங்களில் மிகவும் சர்ச்சைகுரிய கருத்துகளை வெளியிட்டுவரும் டிரம்ப்க்கு அவரது கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குடியரசு கட்சியை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் 50 பேர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் டொனால் டிரம்ப் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருப்பார் என எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் “அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பதற்கான அடிப்படை பண்புகளோ, அனுபவமோ டிரம்புக்கு இல்லை. டிரம்ப் அமெரிக்காவின் அறப்பண்புகளை பலவீனப்படுத்துகிறார்.

    நாங்கள் யாறும் டொனால்ட் டிரம்புக்கு வாக்கு அளிக்க போவது இல்லை” என்று அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு டிரப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
    Next Story
    ×