search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்போதும் படிக்கும் ‘புத்தகப் புழு’ ஆக இருப்பவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்: ஆய்வில் புதிய தகவல்
    X

    எப்போதும் படிக்கும் ‘புத்தகப் புழு’ ஆக இருப்பவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்: ஆய்வில் புதிய தகவல்

    எப்போதும் படிப்பு என புத்தகப் புழு ஆக இருப்பவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
    நியூயார்க்:

    சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று அழைப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் இந்த ஆய்வு 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் ஒன்று புத்தகத்தையே படிக்காதவர்கள், மற்றொன்று வாரத்தில் 3½ மணி நேரம் படிப்பவர்கள், இன்னொன்று அதற்கும் அதிகமாக நேரம் படிப்பவர்கள் என பிரித்து 12 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    இவர்களில் வாரத்துக்கு 3½ மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிப்பவர்கள் மற்றவர்களை விட 23 சதவீத கூடுதல் ஆயுளுடன் வாழ்வது தெரிய வந்தது. எனவே, புத்தக புழுக்களாக இருப்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×