என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடத்தல்
  X

  ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுபல்கலைக் கழக பேராசிரியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.

  காபூல்:

  ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

  இங்கு மிகஉயர்ந்த சுவர்களுடன் சுற்றுச்சுவர்கட்டப்பட்டுள்ளது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேற்று அங்கு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் சீருடை அணிந்த சிலர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தனர்.

  பின்னர் அங்கிருந்த வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்தவர். மற்றொருவர் ஆஸ்திரேலியவை சேர்ந்தவர்.

  இவர்களை கடத்தியது யார் எதற்காக கடத்தினார்கள் என தெரியவில்லை.குறிப்பாக தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்கவில்லை. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஹீரத் அருகே 3 அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். இது நடந்து 3 நாட்களுக்கு பிறகு இக்கடத்தல் நடைபெற்றுள்ளது.

  அதே நேரத்தில் தலிபான்கள் வசமுள்ள லோகார் மாகாணத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து பாகிஸ்தானியர்கள் சிறை பிடிக்கப்பட்ட நாளன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×