என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்த போலீஸ்காரர்
Byமாலை மலர்26 July 2016 4:32 AM GMT (Updated: 26 July 2016 4:32 AM GMT)
படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட போலீஸ்காரர்
ஓஸ்லோ:
நார்வே நாட்டில் மக்கள் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இருப்பதில்லை.
அந்த நாட்டில் போலீஸ்காரர் ஒருவர் விதி முறைகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த போலீஸ்காரரின் பெயர் ஆர்னேஸ்டேவன். இவர், ரோந்து படகு கண்காணிப்பு போலீஸ்காரராக உள்ளார்.
இந்த படகில் செல்பவர்கள் கண்டிப்பாக கவச உடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அவர் படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டார். கவச உடை அணியாவிட்டால் அதற்கு சட்டப்படி அபராதம் வழங்க வேண்டும்.
எனவே, அவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டார். மொத்தம் ரூ.3,600 அபராதம் விதித்து உடனடியாக அவர் அந்த பணத்தை கட்டினார். இதுபற்றி இணைய தளங்களிலும் தகவல் வெளியானது. அந்த போலீஸ்காரரை பலரும் பாராட்டி உள்ளனர்.

Next Story
×