search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்ட் டிரம்பிற்கு முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி பிரதமர் ஆதரவு
    X

    டொனால்ட் டிரம்பிற்கு முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி பிரதமர் ஆதரவு

    முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
    புடாபெஸ்ட்:

    அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கிளிவ்லேண்ட் பகுதியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த முதல் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹிலாரி கிளிண்டனை விட, டிரம்ப் நல்ல தேர்வு என்று அவர் கூறியுள்ளார்.

    ரோமானியா நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது, “நான் டொனல்ட் டிரம்பின் பிரச்சாரகர் அல்ல. ஐரோப்பியா, ஹங்கேரிக்கு டிரம்ப் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

    தீவிரவாதத்திற்கு எதிராக அவர்(டிரம்ப்) கூறியுள்ள யோசனைகள் ஐரோப்பிய நாடுகளுக்கும் சிறந்தவையாக இருக்கும். குறிப்பாக அகதிகள் நுழைவிற்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்டவை சிறந்த சிந்தனைகளாக உள்ளது” என்று கூறினார்.
    Next Story
    ×