என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: இங்கிலாந்து
லண்டன்:
ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
இந்த ஊக்க மருந்து விவகாரத்தில் ஒட்டு மொத்த ரஷிய வீரர், வீராங்கனைகளுக்கும் தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஆடம் பென் ஹில்லி வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறும்போது, ஊக்க மருந்தில் சிக்கியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இதனால் ரஷியாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றார். ஆடம் பென் ஹில்லி இங்கிலாந்துக்கான ஐ.ஒ.சி.யின் உறுப்பினர் ஆவார்.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவையும் ரஷியாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தன.
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.