என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
71 மணி நேரம் இடைநில்லா பயணம்: ஸ்பெயினில் தரையிறங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்
Byமாலை மலர்23 Jun 2016 4:00 PM IST (Updated: 23 Jun 2016 4:19 PM IST)
ஒருதுளி எரிபொருள் கூட செலவில்லாமல் வெறும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே 71 மணி நேரம் பறந்த சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியது.
மாட்ரிட்:
ஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானம், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணத்தை தொடர்கிறது. பல்வேறு நகரங்களைக் கடந்து அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக வலம்வந்த இந்த விமானம் கடந்த 11-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தது.
சுமார் பத்து நாட்களாக ஓய்வெடுத்த சோலார் இம்பல்ஸ், கடந்த 20-ம் தேதி அதிகாலை தனது சாதனைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை தொடங்கியது. அதாவது, ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து ஸ்பெயின் வரை இடைநில்லா பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி 71 மணி நேரம் 8 நிமிடங்கள் இடைவிடாமல் பறந்த சோலால் இம்பல்ஸ்-2, திட்டமிட்டபடி இன்று ஸ்பெயினின் செவில்லே நகரில் தரையிறங்கியது. எரிபொருளை பயன்படுத்தாமல், புகையை வெளியிடாமல் சூரிய மின்சக்தியை மட்டுமே பயன்படுத்தி இந்த தொலைவைக் கடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×