search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    என்ஜின் மாசு வெளியேறுவதில் மோசடி: வோல்க்ஸ்வேகன் கார் நிறுவன தலைவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்
    X

    என்ஜின் மாசு வெளியேறுவதில் மோசடி: வோல்க்ஸ்வேகன் கார் நிறுவன தலைவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்

    டீசல் என்ஜினில் சில தொழில்நுட்ப மோசடி ஏற்பட்டதற்கு வோல்க்ஸ்வேகன் கார் நிறுவன தலைவர் மத்தியாஸ் முல்லர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்
    ஹனோவர் :

    ஜெர்மனியை தலைமையிடமாக வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொதுவாக கார் என்ஜினில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாசு வெளியேற வேண்டும் என்ற சர்வதேச விதி உள்ளது. ஆனால் இந்த நிறுவனம் தங்களது கார்களில் அதிக அளவு மாசு வெளியேறுவது தெரியாமல் இருக்க டீசல் என்ஜினில் சில தொழில்நுட்ப மோசடி செய்தது.

    இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக உருவெடுத்தது. கடந்த செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை வெடித்தது. அப்போது தங்கள் கார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்தது.

    இந்நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு இந்த மோசடிக்கு தற்போதைய நிறுவன தலைவர் மத்தியாஸ் முல்லர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கார் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடி குறித்து வோல்க்ஸ்வேகன் முன்னாள் தலைவர் மார்ட்டின் வின்டர்கோர்ன், பொறுப்பு அதிகாரி ஹெர்பர்ட் டியஸ் உள்ளிட்டோரிடம் உயர்மட்ட அளவிலான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×