என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் சீனக் கடல் பிரச்சனையை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முயற்சிக்க வேண்டாம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Byமாலை மலர்6 Jun 2016 9:54 PM GMT (Updated: 6 Jun 2016 9:54 PM GMT)
தென் சீனக் கடல் பிரச்சனையை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்:
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தென் சீனக் கடல் பிரச்சனையை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முயற்சிக்க வேண்டாம் என்று சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:-
தென் சீனக் கடல் பிரச்சனையில் அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புகிறது என்பதை தெளிவு படுத்துகிறேன்.
எதற்கும் உரிமை கோருபவர் நாங்கள் அல்ல. அதற்கான எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை. சட்டத்தின் வழியில், பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
முன்னதாக தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தற்போது தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக ஓடுபாதை ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×