search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்
    X

    துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்

    மக்கள் தொகையை பெருக்க துருக்கி பெண்கள் தலா 3 குழந்தைகள் பெற வேண்டும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இஸ்தான்புல்:

    துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார்.

    மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப்படுத்த சமீப காலமாக இவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
    Next Story
    ×