search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி ஜெனிவா சென்றடைந்தார்
    X

    பிரதமர் நரேந்திர மோடி ஜெனிவா சென்றடைந்தார்

    ஆப்கானிஸ்தான், கத்தாரை அடுத்து ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவா சென்றடைந்தார்.
    ஜெனிவா:

    ஆப்கானிஸ்தான், கத்தாரை அடுத்து ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவா சென்றடைந்தார்.

    சுவிட்சர்லாந்து அதிபர் ஸ்க்நெய்டர் அம்மானுடன் இந்தியா-சுவிட்சர்லாந்து இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தும் மோடி, ஸ்விஸ் வங்கிகளில் இந்திய முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணு உற்பத்திக்கான மூலப்பொருட்களை சப்ளை செய்யும் நாடுகளிடம் கூட்டமைப்பில் சுவிட்சர்லாந்து தலைமையிடம் வகித்துவரும் நிலையில் இந்தியாவையும் இந்த கூட்டமைப்பு நாடுகளின் பட்டியலில் இணைப்பதற்கு அந்நாடு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அதிபர் ஸ்க்நெய்டர் அம்மானை அவர் வலியுறுத்துவார்.

    சுவிட்சர்லாந்து நாட்டின் பிரபல தொழிலதிபர்களை சந்திக்கும் மோடி, இந்தியாவில் தொழில் முதலீட்டை திரட்டும் நோக்கில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்குள்ள இந்திய விஞ்ஞானிகளையும் அவர் சந்திக்கிறார்.

    சுவிட்சர்லாந்து பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அளிக்கும் சிறப்பு விருந்தில் நாளை (7-ம் தேதி) பங்கேற்கிறார். அங்கிருந்து மெக்சிகோ நாட்டுக்கு செல்லும் அவர் அந்நாட்டின் அதிபரை சந்தித்து இந்தியா-மெக்சிகோ இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
    Next Story
    ×