என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் விசா மோசடி: 2 இந்திய சகோதரர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை
Byமாலை மலர்6 Jun 2016 2:18 AM GMT (Updated: 6 Jun 2016 2:18 AM GMT)
அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட 2 இந்திய சகோதரர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ‘திபான் சொல்யூசன்ஸ்’ என்ற பெயரில் தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தவர்கள் அதுல் நந்தா (வயது 46), ஜித்தன் ஜெய்நந்தா (45). இந்திய சகோதரர்கள்.
இவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினர்.
அங்கு கேரல்டன் நகரில் உள்ள தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர்களை அமர்த்துவதாக கூறி, ‘எச்1பி’ விசா பெற்று தந்தனர்.
ஆனால் அவர்களுக்கு அங்கு எந்த வேலையும் தரவில்லை. வேலையும் இல்லை. மாறாக அமெரிக்கா முழுவதிலும் உள்ள 3-வது நபர் கம்பெனிகளில் அவர்களுக்கு ஆலோசனை பணியை பகுதி நேரப்பணியாக பெற்று தந்துள்ளனர்.
‘எச்1பி விசா’ பெற்றுத்தருவதற்காக அந்த பணியாளர்களுக்கு முழு நேர பணியும், ஆண்டு ஊதியமும் தருவதாக தவறான தகவல் கொடுத்து மோசடி செய்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் லாபம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது விசா மோசடி வழக்கு, டெக்சாஸ் மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்பரா லின், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Next Story
×